73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக...தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும்! - மு.க.ஸ்டாலின்

73 ஆண்டு கால வரலாற்றை கொண்ட திமுக தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக...தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும்! - மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இதனையடுத்து பேசிய முதலமைச்சர், 1949 ஆம் ஆண்டு கொட்டுகின்ற மழையில் ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கி வைக்கப்பட்டது திமுக என்றார். ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும்,  ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காகத் தொண்டாற்றும் பேரியக்கம் திமுக என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com