
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி சங்குபுரம் 3-ம் தெருவைச் சேர்ந்தவர்கள் சாந்தி மற்றும் முத்துக்குட்டி. இவர்கள் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சாந்திக்கும் முத்துக்குட்டிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு அது ஒரு கட்டத்தில் மோதலாக மாறியது. இதனால் சாந்தியும், முத்துக்குட்டியும் ஒருவரை ஒருவர் தலை முடியை பிடித்து இழுத்து நடுத்தெருவில் சண்டையிட்டு கொண்டனர். இதை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் இந்த குடுமிப் பிடி சண்டை தொடர்பாக சாந்தி மற்றும் முத்துக்குட்டி இருவரும் தனித்தனியே கொடுத்த புகார்களின் பேரில் இருவர் மீதும் சங்கரன்கோவில் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.