ஓடும் பேருந்தில் சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த தொழிலாளி... போக்சோ சட்டத்தில் கைது..!

உடுமலை அருகே ஓடும் பேருந்தில் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஓடும் பேருந்தில் சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த தொழிலாளி... போக்சோ சட்டத்தில் கைது..!

உடுமலை அருகே ஓடும் பேருந்தில் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

உடுமலையையடுத்த கல்லாபுரம் இந்திரா புதுநகரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் தண்டபாணி(42). கூலித் தொழிலாளியான, இவர் அமராவதி நகர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது 6 மற்றும் 7 ம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் அதே பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இருக்கையில் அமர்ந்திருந்த அந்த சிறுமிகளிடம் தண்டபாணி பாலியல் சீண்டல்  செய்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஒரு சிறுமியின் தாயார் உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.உடனடியாக சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தண்டபாணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.