பாஜகவை முறியடிக்க தொழிலாளர்கள் அரசியல் போராட்டம் செய்ய வேண்டும் - டி.ராஜா

உழைக்கும் மக்களை மதத்தின் பெயராலும் ஜாதியின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும் பிளவு படுத்தி பாஜக, ஆர்.எஸ்.எஸ். நாசகர வேலை செய்கிறது.

பாஜகவை முறியடிக்க தொழிலாளர்கள் அரசியல்  போராட்டம் செய்ய வேண்டும் -  டி.ராஜா

மே 1 - உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கொடியேற்றி வைத்து  செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர், 

"உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் செங்கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முறையாக மே தினம் கொண்டாடப்பட்ட இடம் சென்னை தான். இப்பொழுது எல்லாரும் சாதாரணமாக 8 மணி நேர வேலை என்கிறார்கள்.. இது சாதாரணமாக எழுந்த முழக்கம் அல்ல. சிக்காகோவில் தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி தொடங்கிய போராட்டம் இது"  என்றார்.  

மேலும், தற்பொழுது அதிகாரத்தில் இருக்கும் பாஜக பின்பற்றும் புதிய பொருளாதாரக் கொள்கை நாசக்கார கொள்கையாக இருக்கிறது எனவும், . பாஜக -வை ஆட்டி வைக்கும் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது. உழைக்கும் மக்களை மதத்தின் பெயராலும் ஜாதியின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும் பிளவு படுத்தி பாஜக, ஆர்.எஸ்.எஸ். நாசகர வேலை செய்கிறது எனவும் விமர்சித்துள்ளார்.

எனவே பாஜக -வை  முறியடிக்க தொழிலாளர் வர்க்கம் அரசியல் ரீதியாக போராட வேண்டும் என்றார். அதோடு, நமக்கு அரசியல் விடுதலை கிடைத்திருக்கிறது. ஆனால் பொருளாதார விடுதலை, சமூக நீதி விடுதலை இல்லாத நாடாக தான் இந்தியா இருக்கிறது. இத்தகைய பாஜக கட்சியை அகற்ற வேண்டும் என்கிற அரசியல் விழிப்போடு தொழிலாளர் வர்க்கம் போராட வேண்டிய அவசியத்தை இந்த மே தினம் வலியுறுத்துகிறது. என்றும் கூறினார்.

மேலும், பாஜக பிடியில் இந்த நாடு சிக்கி நம் அரசியல் சட்டமே தகிர்க்கப்படுகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஒரு நாடு ஒரு கலாச்சாரம் என்று தொடங்கி.. ஒரு நாடு, ஒரு கட்சி, ஒரு தலைவர் என்ற அளவிற்கு போய்விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது எனக்கு குறிப்பிட்டார். 

தொடர்ந்து, 12 மணி நேர வேலை திருத்த  சட்ட மசோதா திரும்ப பெறப்படும் என முதலமைச்சர் அறிவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில்,  இது ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்ட பிரச்சினை. தொழிற்சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் முதல்வர் இதை திரும்ப பெற வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள்.. தமிழக உழைக்கும் மக்களின் நலனில் அக்கறையோடு சிந்தித்த  முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று அந்த முடிவை கைவிட்டு இருக்கிறார். அது பாராட்டத்தக்க.. வரவேற்கத்தக்க விஷயம் எனவும் கூறினார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது தொடர்பான கேள்விக்கு பஹிழல்தரு பேசிய அவர், தேர்தல் ஆணையம் சில சட்ட பிரச்சினைகளை வைத்துக்கொண்டு ஒரு கட்சி தேசிய கட்சியா, இல்லையா என்பதை முடிவு செய்கிறது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் எத்தனை நாளைக்கு நிற்கும் என்பது எனக்கு தெரியாது. தேர்தல் ஆணையத்தை அமைப்பதே சரியான நடைமுறையா என உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் எப்படி நியமிக்கப்படுகிறார்? அந்த முறை சரிதானா? என உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்கிறது என குறிப்பிட்டார்.  

இதையும் படிக்க   ]  தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும்... 2000 -க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு....! - அமைச்சர் அன்பில் மகேஷ்

மேலும், இந்தியாவின் வரலாறு, கட்சிகளின் வரலாறு, கட்சிகளின் செயல்பாடு இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் தேர்தல் ஆணையம் தீர்மானிக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தேர்தல் ஆணையம் இப்படி தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல. எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மக்களின் ஆதரவோடு நாங்கள் முன்னேறுவோம் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க   ]  'இந்துத்துவா-கார்ப்பரேட்' என்ற கூட்டு அரசை வீழ்த்த.... மக்கள் உழைத்து வருகின்றனர்..! - ஜி.ராமகிருஷ்ணன்