உலக ரத்த தான தினம்.. புதுச்சேரியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி.. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உலக ரத்த தான தினம்.. புதுச்சேரியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி.. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

முதன் முதலில் ரத்த வகைகளை கண்டுப்பிடித்த கார்ல் லேன்ஸ்டைனரின் பிறந்தநாளான இன்று வருட வருடம் உலக ரத்த தான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜிப்மர் வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை  ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜேஷ் அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் ரத்த தானத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சைக்கிளில் பதாகைகள் வைத்து கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாக கடலூர் சாலையில் உள்ள எ. எஃப்.டி மைதானம் வந்தடைந்தனர். முன்னதாக சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் ரத்ததானம் பற்றிய உறுதிமொழி எடுத்து கொண்டனர்.