தென் மாவட்டங்களுக்கு சசிகலா அரசியல் சுற்றுப்பயணம்... முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, மதுரையில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

தென் மாவட்டங்களுக்கு சசிகலா அரசியல் சுற்றுப்பயணம்... முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, இன்று மதுரை கோரிபாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்‍கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக மதுரையில் சசிகலாவை சந்தித்த தென்காசி, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் அவரிடம் வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில், அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.