2k கிட்ஸ் ஜோடியாக வந்தால் ஏற்காட்டில் அனுமதி இல்லை: காவல்துறை எச்சரிக்கை...

ஏற்காட்டிற்கு 18 வயதிற்கும் குறைவானவர்கள் ஜோடியாக வந்தால் அனுமதி இல்லை என சேலம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தையல் நாயகி தெரிவித்துள்ளார்.

2k கிட்ஸ் ஜோடியாக வந்தால் ஏற்காட்டில் அனுமதி இல்லை: காவல்துறை எச்சரிக்கை...

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்காட்டில் உள்ள தங்கும் தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்டு வந்த ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களை சேலம் மாவட்ட துணை காவல் கண்காளிப்பாளர் தையல் நாயகி பார்வையிட்டு அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வந்த அணைத்து ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களை மூட உத்தரவிட்டார்.

 அதனை தொடர்ந்து இன்று    துணை காவல் கண்காளிப்பாளர் தையல் நாயகி ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார், அதில்  ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் உள்ள தங்கும் விடுதிகளில் அரசு அனுமதியுடன் மீண்டும் அதனை எவ்வாறு மீண்டும் இயக்குவது மற்றும் அதற்கு எங்கு எங்கு அனுமதி வாங்க வேண்டும் என்று விரிவாக கூறினார். மேலும் சென்டர்கள் நடத்த அனுமதி வாங்கிய தனியார் தங்கும் விடுதியின் மேலாளர் ஒருவரை  அவர் எவ்வாறு  அனுமதி வாங்கினார் என்பதையும் விளக்கி கூற வைத்தார். 

பின்னர் அரசு அனுமதி பெற்று நடத்தி வரும் தங்கும்  விடுதி பணியாளர்கள் அரசு அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக நடத்திவரும் தங்கும் விடுதிகளை பற்றி தகவல் கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.அதனை தொடர்ந்து ஏற்காட்டிற்கு 18 வயதிற்கும் குறைவானவர்கள் ஜோடியாக வந்தால் அவர்களை ஏற்காடு அடிவாரத்தில் உள்ள காவல் கண்காணிப்பு சாவடியில் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அதனை மீறி 18 வயதிற்கு குறைவானவர்கள் தங்களது தங்கும் விடுதிகளுக்கு தங்குவதற்கு வந்தாலே அறை கொடுக்க வேண்டாம் என்றும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும் என்று கூறினார்.  

மேலும் விடுதிகளில் இரவு நேரங்களில் தங்குபவர்களில் பெயர் பட்டியலை தினமும் காவல் நிலையத்திற்கு தரவேண்டும்.  மேலும் சந்தேகத்துக்குரிய வகையில் யாரேனும் வந்தால்  உடனடியாக  காவல் துறைக்கு  தெரியப்படுத்த வேண்டும்  என்றும் கூறினார்.  இந்த நிகழ்ச்சியை ஏற்காடு காவல் ஆய்வாளர் ரஜினி மற்றும் துணை ஆய்வாளர் சபாபதி ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.