”சன்னாக இருப்பதால் மட்டுமே பதவிக்கு வருபவர்களுக்கு, சன்னியாசியாக பதவிக்கு வருபவர்களை பற்றி தெரியாது” தமிழிசை!

”சன்னாக இருப்பதால் மட்டுமே பதவிக்கு வருபவர்களுக்கு, சன்னியாசியாக பதவிக்கு வருபவர்களை பற்றி தெரியாது” தமிழிசை!

சன்னாக இருப்பதால் மட்டுமே பதவிக்கு வருபவர்களுக்கு, சன்னியாசியாக இருந்து  பதவிக்கு வருபவர்களை பற்றி தெரியாது என யோகி ஆத்யநாத்தை விமர்சித்த முரசொலிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார். 

கோவை மாவட்டம் கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதியில் அமைந்துள்ள ஆதிஅமரநாயகி உடனமார் ஆதிசங்கரர் திருக்கோயில் குடமுழுக்கை ஒட்டி நடைபெற்ற யாக வேள்வியில் கலந்து கொண்டு தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தனர். 

இதையும் படிக்க : "பிரதமர் மோடி ஆட்சியில் அதானி குடும்பம் மட்டுமே வாழ்ந்தது" உதயநிதி ஸ்டாலின்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வயதில் சிறியவராக இருந்தாலும் யோகி ஆதித்யநாத் காலில் விழுவேன் என ரஜினிகாந்த் தெரிவித்த நிலையில், யோகி ஆதித்யநாத் சன்னியாசியா இல்லையா என முரசொலி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளதாகவும், சுய உழைப்பில் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்து யோகி பதவிக்கு வந்துள்ளதாகவும் கூறினார். 

மேலும், சன்னாக இருப்பதால் மட்டுமே பதவிக்கு வருபவர்களுக்கு, சன்னியாசியாக இருந்து  பதவிக்கு வருபவர்களை பற்றி தெரியாது என யோகி ஆத்யநாத்தை விமர்சித்த முரசொலிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார்.