2 டோஸ் தடுப்பூசி போட்டால் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் : புதிய விதிமுறையால்  பயணிகள் அவதி!!

சென்னை புறநகர் ரயில்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

2 டோஸ் தடுப்பூசி போட்டால் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் : புதிய விதிமுறையால்  பயணிகள் அவதி!!

தமிழகத்தில் மீண்டும் சுனாமி வேகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு நேர முழு நேர ஊரடங்கு, வார இறுதிநாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை என கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை புறநகர் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் ரயில் பணிகளுக்கும் தென்னக ரயில்வே விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், பயணசீட்டு மற்றும் மாதாந்திர பாஸ் பெறும் போது கட்டாயம் 2டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும், செல்போன் செயலி மூலமாக பயணச்சீட்டு பெறும் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு போன்ற விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் புதியதாக சீசன் டிக்கெட் பெறும் போது தடுப்பூசி செலுத்திய சான்றின் எண் சீசன் டிக்கெட்டில் அச்சிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் அல்லது ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் பயணிகளிடம் 500ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் பொன்னேரி ரயில் நிலையத்தில் 2டோஸ் தவணை தடுப்பூசி செலுத்தாத பயணிகள் ரயில் நிலைய வாயிலிலேயே ரயில்வே போலீசார் சோதனை செய்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் 2டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாயினர்.

சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க வேண்டும் எனவும், 50% பயணிகள் மட்டுமே அனுமதி என்ற நிலையில் ரயில் சேவையை அதிகரித்து அலுவலக நேரத்தில் 12பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.