யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு! ஓட்டுநர் கைது!

யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு! ஓட்டுநர் கைது!

யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி உயிரிழந்ததால் அவரது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த காட்டாங்களத்தூர் முல்லை நகரை சேர்ந்தவர் பத்மாவதி(55). இவர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை பத்மாவதி மறைமலை நகரில் உள்ள  தனது மகளை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மறைமலைநகர் முனிசிபாலிட்டி அலுவலகம் அருகே சாலையை கடக்கும் போது செங்கல்பட்டில் இருந்து அதிவேகமாக சென்னை நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று மூதாட்டி பத்மாவதி மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த சிட்டலப்பாக்கம் பகுதியை சேர்ந்த அசாருதீன் (34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அசாருதீன் ஓட்டி வந்த கார் பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பது தெரியவந்தது. 

பின்னர் இவ்விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் அசாருதீன் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த விபத்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:நடுநிலைமை வகிக்குமா செங்கோல்?