
ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதி உணவை உண்ட தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பாக, யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஆவேசமாக பேசி சர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று திருச்சி பிராட்டியூர் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்ற அவரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி, திருச்சி மாநகர காவல் ஆணையரிடம், கணவரை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளார்.