அரசு வேலை வழங்குமாறு கனிமொழி எம்.பி.-யிடம் இளம் பெண் கோரிக்கை..!

அரசு வேலை வழங்குமாறு கனிமொழி எம்.பி.-யிடம் இளம் பெண் கோரிக்கை..!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பெண்ணுரிமை மாநாட்டில் பங்கேற்ற கனிமொழி எம்பியிடம் பெண் குழந்தை பெற்றதால் கணவரால் கைவிடப்பட்ட பெண்  அரசு வேலை கோரி மனு அளித்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாட்டில்  கனிமொழி எம்பி,கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி அமைச்சர் மனோதங்கராஜ் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாநாட்டு மேடையில் கைக்குழந்தையுடன் வந்த அனு என்ற பெண்,  எம்.பி கனிமொழி யிடம் தனக்கும் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஜித் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும்

கடந்த  6-மாதத்திற்கு முன் தனக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில்,  'பெண் குழந்தை'யை பெற்றெடுத்ததால் தன்னை கணவர் ரஜித் துரத்தி விட்டதாகவும் தற்போது தாய் வீட்டில் வருமானமின்றி கைக்குழந்தையுடன் தவிக்கும் தனக்கு அரசு வேலை யாதாவது தந்துதவுமாறு கூறி மனு அளித்தார்.

அதேப்போல் விழா மேடையில் தமிழகத்தின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநரான வசந்தகுமாரி அவர்களுக்கு அக்கட்சியின் சார்பாக விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com