மருத்துவமனை அமைக்க இளைஞர்கள் எதிர்ப்பு..! பேருந்தை சிறைபிடித்ததால் பரபரப்பு.! 

மருத்துவமனை அமைக்க இளைஞர்கள் எதிர்ப்பு..! பேருந்தை சிறைபிடித்ததால் பரபரப்பு.! 

திருமங்கலம் அருகே இளைஞர்கள் ஏற்படுத்திய பூங்காவில் புதிதாக கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு எதிர்ப்பு பேருந்துகளை சிறைபிடித்து இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

மதுரை அருகேயுள்ள திருமங்கலம் தொகுதி, கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குராயூர் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், குராயூர் கிராம இளைஞர்கள் மரங்கள் நட்டு பூங்கா அமைத்த இடத்தில் புதிய மருத்துவமனை கட்டா ஊராட்சி மன்ற தலைவர் வீரபத்திரன் ஏற்பாடு செய்தார். 

இதற்கு இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி மருத்துவமனை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் குராயூர் பேருந்து நிறுத்தம் அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுதொடர்பாக, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.