ஆன்லைன் பிரியர்களுக்கு ஆப்பு வைத்த Zomota... 10 நிமிட டெலிவரிக்கு வந்த சோதனை!.. என்ன ஆச்சி?

10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் சொமோட்டோவின் புதிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அத்திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் பிரியர்களுக்கு ஆப்பு வைத்த Zomota... 10 நிமிட டெலிவரிக்கு வந்த சோதனை!.. என்ன ஆச்சி?

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, கடந்த 21ம் தேதி 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்திட்டம் தொடர்பாக சொமோட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து காவல் துறையும் விளக்கம் கேட்க முடிவு செய்தது.

அதன் அடிப்படையில், ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட தனியார் உணவு டெலிவரி நிறுவனங்களுடன் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் சரக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சொமேட்டோ நிறுவன பிரதிநிதிகள், சென்னை நகரில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் திட்டம் அறிமுகப் படுத்தப்படாது என தெரிவித்துள்ளனர். மேலும் எந்தத் திட்டம் ஆனாலும் முறையான முன்னறிவிப்பு மற்றும் காவல்துறையின் ஒத்துழைப்புடனேயே தொடங்கப்படும் என்றும் சொமோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.