ஊழல் குறித்த ஆடியோ விவகாரத்தை மறைப்பதற்காகவே இலாக்கா மாற்றம் - ஆர். பி .உதயகுமார் விமர்சனம்!

ஊழல் குறித்த ஆடியோ விவகாரத்தை மறைப்பதற்காகவே இலாக்கா மாற்றம் -  ஆர். பி .உதயகுமார் விமர்சனம்!

ஊழல் குறித்த ஆடியோ விவகாரத்தை மறைப்பதற்காகவே அமைச்சர் இலாகா மாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோவால் அவரின் அமைச்சர் இலாக்கா மாற்றப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஊழல் குறித்த ஆடியோ விவகாரத்தை மறைப்பதற்காகவே அமைச்சர் இலாக்கா மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். 

அமைச்சர்களின் இலாகா மாற்றம் தமிழ்நாட்டு மக்களிடையே எந்த ஒரு நற்பெயரையும் ஏற்படுத்தாது என்றும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்பாடு, எதிர்கட்சி தலைவராக இருந்த போது பேசியதற்கு முரணாக உள்ளதாகவும் விமர்சித்தார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com