நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... நான்கு மாவட்டங்களில் கனமழை...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அறிவித்துள்ளது.
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... நான்கு மாவட்டங்களில் கனமழை...

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com