போதைக்காக தின்னரை எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து   குடித்தவர் உயிரிழப்பு...

போதைக்காக  தின்னரை எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து   குடித்தவர் உயிரிழப்பு...
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம்  அருகே போதைக்காக பெயின்ட்டில்  பயன்படுத்த கூடிய தின்னரை எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து   குடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.இதன்காரணமாக  டாஸ்மாக் கடைகள்  அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

இதனால் மதுப்பிரியர்கள் அனைவரும் தாங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் பெயிண்டில் கலந்து மரப்பொருட்களுக்கு அடிக்க பயன்படுத்தப்படும் தின்னரை  எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து போதைக்காக குடித்துள்ளனர்.இந்த சம்பவத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com