திமுக எம். பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி. இவர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் 6 மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியை உடல்நிலை காரணமாக ஆ. ராசா கடந்த கடந்த சில நாட்களாக அங்கு தங்கி மனைவியை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், கொரோனா ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு சென்று அங்கு ஆ.ராசாவை சந்தித்து சிகிச்சை பெற்றுவரும் அவரின் மனைவி பரமேஸ்வரியின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.
திடீரென அங்கு வந்த ஸ்டாலினை பார்த்ததும் ஆ.ராசா ஸ்டாலினை கட்டியணைத்து அவரிடன் தனது சோகத்தை பகிர்ந்து இருக்கிறார். மேலும் நம்பிக்கையாக இருங்கள், குணமாகிவிடுவார் என்று ஸ்டாலின் ராசாவிற்கு நம்பிக்கை அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.