திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். சமூக ஆர்வலரான இவர் தனது சொந்த செலவில் உடல்களை நல்லடக்கம் செய்து வருகிறார்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் பாலாற்றில் உள்ள மயானத்தில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த சிலமாதங்களாக ஆதரவற்ற நிலையில் இருக்கும் சுமார் 70 வயது மதிக்கதக்க 5 ஆண்களின் பிரேதங்களை இன்று காவல்துறையினரின் அனுமதியோடு மணிமாறன் எடுத்து சென்றார்.
இதனையடுத்து, மணிமாறன் தனது சொந்த செலவில் நண்பருடன் இணைந்து முறைப்படி ஐந்து உடல்களையும் நல்லடக்கம் செய்தார். இதுவரையில் சமூக சேவகர் மணிமாறன் கிட்டதட்ட 1,458 ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். அவரின் சேவையானது தொடர்ந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தாய், தந்தையரை வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ள வேண்டாம் என மணிமாறன் இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இவருடைய இந்த சேவையானது அவர் மற்றவர்கள் மேல் வைக்கும் மரியாதையை காட்டுகிறது. மேலும், இவருடைய சமூக சேவை தற்போது இணையத்தில் வைரலாகி பார்ப்போரை நெகிழ்ச்சியில் உறைய வைக்கிறது.