கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின்கம்பங்களை புதை வட மின் கம்பிகளாக மாற்ற முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், கேள்வி-பதில் நேரத்தில் மின் கம்பங்களை புதைவட மின் கம்பிகளாக மாற்றுவது குறித்த கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும் கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகளை புதைவட மின் கம்பிகளாக மாற்ற ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.