மருத்துவ கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2023 - 24ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் கோவை மாவட்டம் அவிநாசியில் நடைபெற்றது. இதில், மருத்துவ வல்லுநர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க : ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்...!
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் லஞ்ச புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவ கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.