பாலியல் சர்ச்சைக்குள்ளான மாஜி அமைச்சருக்கு வக்கீல் நோட்டீஸ்... நடிகையின் வழக்கறிஞர் அதிரடி!!

பாலியல் சர்ச்சைக்குள்ளான மாஜி அமைச்சருக்கு வக்கீல் நோட்டீஸ்... நடிகையின் வழக்கறிஞர் அதிரடி!!

தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்ட மாஜி அமைச்சர் மணிகண்டன், தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என நடிகை சாந்தினியின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்கு பின்,  தமிழக முதல்வராக மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். அப்போது அவருக்கு எதிராக செயல்பட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் மீது ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது . இதன் காரணமாக அவர்களது பதவி பறிக்கப்பட்டது.  பதவி பறிபோனவர்களில் ஒருவர் தான் முன்னாள்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்.

இவருக்கும், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற ‘நாடோடிகள்’ படத்தில் நடித்தவருமான துணை நடிகை சாந்தினி என்பவருக்கும் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது நெருங்கிய தொடர்பாக மாறியுள்ளது. அதன்பின்னர் 2017ம் ஆண்டு முதல் அவர்கள் பெசண்ட் நகர் பகுதியில் வீடு எடுத்து தனியே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது சாந்தினிக்காக  மனைவியை விவாகரத்து செய்யவும் தயாராக இருப்பதாகவும், சட்டப்படி திருமணம் செய்துகொள்வேன் எனவும் உறுதியளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இருவரும் மேலும் நெருக்கமாக, அதன் பயனாக 3 முறை சாந்தினி கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சாந்தினி அமைச்சர் மணிகண்டனை சட்டப்படி திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மணிகண்டன் காலம் கடத்தி வந்துள்ளார். இதையடுத்து சாந்தினிக்கு அவர் சந்தேகம் ஏற்படத் துவங்கியுள்ளது. இதனால் மாஜி அமைச்சரோடு தான் இருந்த தருணங்களை ஆதாரங்களாக சாந்தினி சேர்த்து வைக்க தொடங்கியுள்ளார்.

அண்மையில் கொரோனா காரணமாக தனது சொந்த ஊருக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன்,சாந்தினியுடன் நெருக்கமாக இருந்த படங்களை காட்டி மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இதனை தாக்கு பிடிக்க முடியாமல் போகவே, சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஆதாரங்களோடு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் அவரிடம் இருந்து எனது ஆபாச போட்டோக்களை நீக்குவதோடு, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இதனிடையே  இந்த குற்றச்சாட்டினை அப்பட்டமாக மறுத்த மாஜி அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினி மற்றும் சுதன் ஆகியோர் பணத்திற்காக தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும், இவர்கள் யார் என்றே தனக்கு தெரியாது எனவும், இதுவரை 3 கோடி வரை தன்னிடம் பேரம் பேசியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தன்னை பற்றி அவதூறு பரபரப்பிய மணிகண்டன், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை சாந்தினியின் வழக்கறிஞர் சுதன் மணிகண்டனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்,  தனக்கெதிரான நடவடிக்கையை கைவிடும்படி மணிகண்டன் தான் பேரம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பணம் பறிக்கும் வகையில் தான் நடந்து கொண்டதாக கூறிய அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.