திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர், எம்.பிக்கள் .! உறுப்பினர் அட்டை வழங்கிய ஸ்டாலின்.! 

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர், எம்.பிக்கள் .! உறுப்பினர் அட்டை வழங்கிய ஸ்டாலின்.! 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர் ந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சி நிர்வாகிகள திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் .

கன்னியாகுமரி,  இராம நாதபுரம் தஞ்சாவூர் , ஈரோடு , நாமக்கல் சேலம் , தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர் ந்த அதிமுக , அமமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் திமுகவில் இணை ந்தனர் .

2001ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்தபோது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட வ.து. நடராஜன் மற்றும் ராம நாதபுரம் மாவட்டத்தில் அமமுக சார்பில் சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட வ.து. ந.ஆன ந்த்  ஆகியோர் திமுகவில் இணை ந்தனர். அதிமுகவை சேர் ந்த ஈரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவி ந்தராஜன் இன்று திமுகவில் இணை ந்தார்.

மேலும் அமமுகவின் தஞ்சை தெற்கு  மாவட்ட செயலாளர் , ராம நாதபுரம் மாவட்டத்தை சேர் ந்த  அமைப்பு செயலாளர் உள்ளிட்டோர் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணை ந்தனர். புதிதாக இணை ந்த மாற்று கட்சியினர் முதல்வருக்கு புத்தகம் மற்றும் திமுக கரை வேட்டிகளை பரிசளித்த நிலையில் , முதலமைச்சர் அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி திமுகவில் இணைத்துக் கொண்டார்.