எங்கே இருக்கிறார் ஓபிஎஸ்.? சந்தேகத்தை கண்பார்ம் பன்னும் திடீர் ஆலோசனை கூட்டம்.! 

எங்கே இருக்கிறார் ஓபிஎஸ்.? சந்தேகத்தை கண்பார்ம் பன்னும் திடீர் ஆலோசனை கூட்டம்.! 

அதிமுகவில் சில ஆண்டுகளாகவே சர்ச்சைக்கு எந்த பரபரப்பும் இருக்கவில்லை. அது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிலிருந்து தற்போது வரை தொடருகிறது. தேர்தலுக்கு முன்னும் பின்னும் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையே நடந்த மோதல் கட்சிக்கு அப்பாற்பட்டு வெளியேவும் தெரிந்தது.

இந்நிலையில் திடிரென்று சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் தோல்விக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள விருகை ரவி,சத்யா,ராஜேஷ்,ஆதி ராஜாராம், வளர்மதி,உள்ளிட்டோரும், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போன்ற முக்கிய தலைவர்கள் வந்தனர். அதைத் தொடர்ந்து  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கடைசி வரை இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இது அதிமுக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி 'தனது சொந்த வீட்டின் கிரக பிரவேசம் பூஜை இருந்த காரணத்தால் தான் இன்றைய கூட்டத்தில் பன்னீர் செல்வம் அவர்கள் பங்கேற்க்கவில்லை என்று" கூறியுள்ளார்.