ஒன்று சேர்ந்து செயல்படலாம் என்று அழைத்தால் அரசியல் செய்கிறது அதிமுக.! அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்.!  

 ஒன்று சேர்ந்து செயல்படலாம் என்று அழைத்தால் அரசியல் செய்கிறது அதிமுக.! அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்.!  

சென்னை பெரியார் திடலில் உள்ள சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் திறந்து வைத்தனர்.


அதன்பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "முதலாம் அலை இருந்த போது 13 சித்த மருத்துவமனைகள்தான் இருந்தது தற்போது 50 மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் கோருபவர்களுக்காகவே சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.  

மேலும், இறப்பு சதவிகிதத்தை குறைத்து காட்டவில்லை, இது அரசியல் செய்யும் நேரமில்லை, அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது. அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறோம், கோவில் சொத்துக்களை கூட இணையதளத்தில் வெளியிட்டு வெளிப்படை தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தபோது எதிர்கட்சிகள் என்ன மருத்துவர்களா? எனக் கேள்வியெழுப்பினார். ஆனால் தற்போது தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சிகளையும் ஒன்றினைத்து செயல்படுகிறார் எனக் கூறினார்.