மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழ்நாடு அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மின் கட்டண உயர்வு

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி, அதிமுக சார்பில், தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழ்நாடு அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் போராட்டம்

சென்னை, மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.டி.கே ஜக்கையன் தலைமையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் திரைப்பட நடிகை விந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.