நீதிமன்றத்தை கொச்சைப்படுத்திய எச்.ராஜா... அடுத்த மாதம் தொடங்கும் விசாரணை...

பாஜக பிரபலங்களில் ஒருவரான எச்.ராஜா நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தியதாக வழக்கறிஞர் துரைசாமி தொடுத்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் தொடங்குகிறது.
நீதிமன்றத்தை கொச்சைப்படுத்திய எச்.ராஜா... அடுத்த மாதம் தொடங்கும் விசாரணை...
Published on
Updated on
1 min read
சர்ச்சைப்பேச்சுக்கும், சலசலப்புக்கும் பேர் போனவர்  பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா. கடந்த 2018ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு புதுக்கோட்டை மாவட்டம், மெய்யபுரம் அருகே உள்ள மசூதி அருகில் விநாயகர் சிலை வைக்க மேடை அமைக்க போலீசார் மறுப்பு தெரிவித்த நிலையில், தடையை மீறி அந்த இடத்தில் பாஜக மேடை அமைக்க முயற்சித்தது. அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் எச்.ராஜா. வழக்கம் போல வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரிடம் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே மேடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது, எச்.ராஜா உயர்நீதிமன்றத்தை தகாத வார்த்தையால் திட்டினார். அவர் பேசிய அந்த வீடியோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இந்நிலையில், வழக்கறிஞர் துரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், ஹெச்.ராஜா நீதிமன்றத்தைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசியது தொடர்பான வழக்கல் விசாரணை நடைபெறவில்லை என்றும், போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஹெச்.ராஜா தலைமறைவாக என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவர் காரைக்குடியில்தான் இருக்கிறார் என்று மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கும் என தமிழ்நாடு அரசு தற்போது தெரிவித்துள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com