அதிமுகவில் பூதாகரமான ஒற்றை தலைமை கோஷம்... 4வது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை!

சென்னையில் 4வது நாளாக தனது ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். 
அதிமுகவில் பூதாகரமான ஒற்றை தலைமை கோஷம்... 4வது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை!

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில், வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஒற்றைத்தலைமை குறித்த பேச்சு எழுந்ததால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில், தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த ஒ.பி.எஸ்., ஒற்றைத்தலைமை என்பது தேவையற்ற ஒன்றும் என்றும், பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவிற்கே உரித்தானது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஒற்றை தலைமை குறித்து கருத்து தெரிவித்தவர்களின் மீது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

இந்த நிலையில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில், தனது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், வைத்திலிங்கம் உள்ளிட்டோருடன் ஒ.பன்னிர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com