இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெறுகிறது. 

அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக உறுப்பினர் சேர்ப்பு படிவங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இதுவரை ஒரு கோடியே 35 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பணிகள் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. 

உறுப்பினர் சேர்ப்பு பணிகள் முடிந்த பின் தான் நாடாளுமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைக்க வேண்டியுள்ளதால், உறுப்பினர் சேர்ப்பு பணியினை துரிதமாக முடிக்க இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்படவுள்ளது.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், ஆகஸ்டு மாதம் மதுரையில் நடத்தப்படவுள்ள மாநாடுக்கான பணிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

இன்றைய கூட்டத்தின் முடிவில், மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக போராட்டம் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com