ஓ.பி.எஸ்-ஐ ஜல்லிக்கட்டு நாயகன் என குறிப்பிட்ட அதிமுக எம்எல்ஏ.. எத்தனை காளைகளை அடக்கினார் - அமைச்சர் சாமிநாதன்

ஜல்லிக்கட்டுப் போட்டி குறித்து எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்த விதம் சட்டப்பேரவையில் நகைப்பை ஏற்படுத்தியது.
ஓ.பி.எஸ்-ஐ ஜல்லிக்கட்டு நாயகன் என குறிப்பிட்ட அதிமுக எம்எல்ஏ.. எத்தனை காளைகளை அடக்கினார் - அமைச்சர் சாமிநாதன்

சட்டப்பேரவையில் கைத்தறி, துணிநூல், வணிகவரித்துறை உள்ளிட்டவை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது ஓ.பன்னீர் செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என அதிமுக எம்எல்ஏ சேகர் கூறினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சாமிநாதன், ஓபிஎஸ் எத்தனை ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று காளைகளை அடக்கினார் என கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து உடனே எழுந்த பன்னீர்செல்வம், தான் இளவயது காளையாக இருந்தபோது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கியதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஜல் ஜல் என நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, நீதிமன்றம் தான் போட்டிகளுக்கு தடை விதித்ததாகவும், மக்கள் போராட்டத்தினால் தான் மீண்டும் போட்டிகள் சாத்தியமானதாகவும் கூறினார்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com