அதிமுக பெயர் , கொடி , இரட்டை இலை ஓபிஎஸ் மற்றும் அணியினர் பயன்படுத்த கூடாது  - காட்டத்துடன் தெரிவித்த ஜெயக்குமார்!!

அதிமுக பெயர் , கொடி , இரட்டை இலை ஓபிஎஸ் மற்றும் அணியினர் பயன்படுத்த கூடாது - காட்டத்துடன் தெரிவித்த ஜெயக்குமார்!!

Published on

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அதிமுக கொடியை பயன்படுத்தியதாக சேலத்தில் காவல் துறையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகார் அளிக்கப்பட்டது. இதேபோன்று முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த புகார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாம். இது தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனு அளித்தார்.

ஓபிஎஸ் அணியை சார்ந்த எவரும் ADMK என்று பயன் படுத்தக்கூடாது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியையோ கட்சி பெயரையோ குறிப்பாக இரட்டை இலை கூட ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியை சார்ந்த எவரும் ADMK என்று பயன் படுத்தக்கூடாது,  பயன்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள்.அதே போன்று கட்சி போஸ்டர்களில் கூட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையோ கட்சி சின்னத்தையோ குறிப்பாக கட்சி கொடியை எந்த வகையிலும் பயன் படுத்தாக்கூடாது என்ற வகையில், தெளிவாக கழகப் பொதுச் செயலாளர் அடிப்படையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையிலும், இன்றைக்கு சட்டத்தை மதிக்காமல், சட்டம் எங்களை என்ன செய்யும் என்ற வகையில் ஒபிஸ் அணி செயல்பட்டு வருகிறது அந்த அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக இன்று டிஜிபி அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்துள்ளோம்.

புகார் அளித்த எங்கள் ஆதரவாளர் மீது நடவடிக்கை - ஜெயக்குமார்

வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதிமுக கொடியை பயன்படுத்தியதாக சேலத்தில் காவல் துறையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நாங்கள் புகார் அளித்தோம் இதேபோன்று  பன்னீர் செல்வம் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த புகார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்த எங்கள் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

 ஆகையால் இது தொடர்பாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி அவர்களிடம் மனு அளித்தோம், அவரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

நாங்கள்தான் பயன்படுத்த வேண்டும்  

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றமே இன்றைக்கு கட்சி அலுவலகம், கட்சி சின்னம் கட்சி கொடி போன்றவற்றை நாங்கள்தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்த நிலையில் எவரும் சொந்தம் கொள்ள முடியாது. அதை மீறி செயல்பட்டால் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைமை ஏற்படும்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com