சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், அவருக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மூலம் ஆபாசமாகப் பேசி கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி அவரின் வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சி.வி சண்முகத்துக்கு விலக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.