தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...!

தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...!

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்ற தீர்ப்பை வரவேற்றும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையிலும், தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.  


சேலம் மாவட்டம், அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தில், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு, எம்.ஜி. ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அத்துடன், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியதுடன்  நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேபோன்று, கோவையில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுச்சாமி தலைமையில் அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிமுக நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமையில்  அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com