அமித்ஷா சென்னை வருகை...மக்களவை தோ்தல் குறித்து ஆலோசனை?

அமித்ஷா சென்னை வருகை...மக்களவை தோ்தல் குறித்து ஆலோசனை?

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை தர உள்ளார். 

டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை கோவிலம்பாக்கத்தில் நடைபெற இருக்கும் தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், மாநில பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையிலான கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் மத்திய அமைச்சா் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்துகிறாா். 

பின்னா் ஹெலிகாப்டர் மூலம் வேலூா் செல்லும் அவா்,அங்கு பாஜக மக்களவைத் தொகுதி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். தொடா்ந்து, அங்கு திறந்தவெளி மைதானத்தில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறாா். 

தொடர்ந்து, வேலூரில் இருந்து சென்னைக்கு வரும் அவா், விமானம் மூலம் விசாகப்பட்டிணம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியே சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com