விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

விதிகளை மீறி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடனை வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

விதிகளை மீறி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடனை வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு நகைக்கடன் பெற்றிருக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்கு அந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றது தற்போது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து 5 சவரனுக்கு அதிகமாக விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை  சேகரித்து வருகிறது. 5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதேபோல் நகைக்கடன்களின் தவணையை கட்ட தவறியர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.