அண்ணா, பெரியார் காலத்திலேயே சனாதனம் ஒழிந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் பா.ஜ.க., மாவட்ட துணைத் தலைவர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, உதயநிதி வரலாறு தெரியாமல் பேசிவருவதாகவும், விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு பிள்ளையாகவே இருப்பதாகவும் கூறினார். அண்ணா, பெரியார் காலத்திலேயே சனாதனம் ஒழிந்துவிட்டதாக கூறினார்.
இதையும் படிக்க : கனடா நாட்டினருக்கான விசாவிற்கு தடை - மத்திய அரசு அதிரடி
தொடர்ந்து பேசியவர், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை உள்ளது என யாராவது பேசி இருக்கிறோமா? என்றும், மாநில தலைவர் அண்ணாமலை சொன்ன விதம் தான் தவறு எனவும் விளக்கமளித்தார்.