ஆ.ராசாவைக் கண்டித்து பாஜக போராட்டம்-அண்ணாமலை அறிவிப்பு!

ஆ.ராசாவை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை குற்றம் சாட்டியுள்ளார்.

ஆ.ராசாவைக் கண்டித்து பாஜக போராட்டம்-அண்ணாமலை அறிவிப்பு!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, வரும் 26ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆ.ராசாவை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளும் திமுக அரசின் பிடியில் காவல்துறை உள்ளதாகவும், அதனை தட்டிக் கேட்கும் பாஜகவினர், பொய் வழக்கில் கைது செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்து வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி கோவையில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.