"திமுகவினர் விஞ்ஞான முறையில் ஊழல் செய்கின்றனர்" அண்ணாமலை விமர்சனம்!

"திமுகவினர் விஞ்ஞான முறையில் ஊழல் செய்கின்றனர்" அண்ணாமலை விமர்சனம்!
Published on
Updated on
1 min read

திமுகவினர் விஞ்ஞான முறையில் ஊழல் செய்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சிலோன் ஆபீஸில் இருந்து தொடங்கிய அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம், துறையூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கு பேசிய அண்ணாலை, திமுக ஆட்சியாளர்கள் மணல் கொள்ளையில் அதிக அளவில் ஈடுபடுவதாக சாடியுள்ளார்.

மேலும், படித்த பேராசிரியராக இருப்பவர் மட்டுமே துணை வேந்தராக  தகுதியானவர்கள் என்றும் இதை புரியாமல் ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்துவதாக கூறினார். மேலும் துறையூரில் ஒரு அரசு கல்லூரி இல்லை, ரயில் நிலையம் இல்லை, புதிய பேருந்து நிலையம் இல்லை, என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளையும் அண்ணாமலை முன்வைத்தார்.

தொடர்ந்து முசிறி புதிய பேருந்து நிலையத்தில் நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை, முசிறி பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றதையடுத்து முசிறி கைகாட்டியில் நடைபயணத்தை நிறைவு செய்தார். 

அங்கு பேசிய அண்ணாமலை, முசிறி தொகுதிக்கு திமுக அளித்த ஐந்து வாக்குறுதிகளில் தற்போது வரை எதுவும் நிறைவேற்றவில்லை என்றும் விஞ்ஞான முறையில் ஊழல் செய்து கொண்டிருப்பவர்கள் திமுகவினர் என்றும் விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com