மாநிலத் தலைவர் பதவிக்காக பாஜகவை தூக்கி பிடிக்கும் அண்ணாமலை!!

மாநிலத் தலைவர் பதவிக்காக பாஜகவை தூக்கி பிடிக்கும் அண்ணாமலை!!

படிப்பதையோ மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டையோ நிறுத்த முடியாத காரணத்தால் தற்கொலைக்கு தூண்டிவிடும் விதமாக ஆர்எஸ்எஸ், பாஜக செயல்பட்டு வருவதாக ரஞ்சன் குமார் குற்றச்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான மும்பை,சென்னை ஐஐடி-களில் தொடரும் மாணவர்கள் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் சென்னை ஐஐடி வளாகத்தின் முன்பு தீப்பந்த ஊர்வலம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.  அதன்பின் மெழுகுவர்த்தி ஊர்வலம் மட்டுமே நடத்த அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து தீப்பந்தம் கொளுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறை தலைவர் ரஞ்சன் குமார் பேட்டியளித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வஞ்சகபடுத்தி உயர் சாதி சமூகத்தினர் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் தவறுதலான தூண்டுதல்களால் பல்வேறு செயல்கள் நடைபெற்று வருகிறது.  பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2021 வரையில் பாராளுமன்ற அறிக்கை படி 122 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.  இதில் 72 மாணவர்கள் பட்டியலின மக்களை சார்ந்தவர்கள்.  அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி பட்டியல் இன மக்கள் கஷ்டப்பட்டு படித்து வரும் நிலையில், இது போன்ற வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது.

படிப்பதையோ மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு நிறுத்த முடியாத காரணத்தால் தற்கொலைக்கு தூண்டிவிடும் விதமாக ஆர்எஸ்எஸ், பாஜக செயல்பட்டு வருகிறது.  மோடி தலைமையிலான அரசு இதனை நிறுத்த வேண்டும் என இன்று போராட்டம் நடத்தி வருகிறோம்.  அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வரும் நிலையில் எஸ்.சி துறையின் சார்பில் வருங்காலங்களில் இது போன்ற செயல் நடைபெறாமல் இருக்கவும் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் தற்போது தீப்பந்தம் ஏந்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக போராடி வருகிறோம். 

அனைத்து துறைகளிலும் மோடி அரசால் இருளாக மூடிக் கொண்டிருக்கிறது. மாணவர்களிடம் வன்முறையை தூண்டி தவறான எண்ணத்தை விதைக்கும் முயற்சியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  மாநிலத் தலைவர் பதவிக்காக அண்ணாமலை பாஜகவை தூக்கிப் பிடிக்கிறார் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com