சென்னை பல்கலைக்கழகத்தின் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு! மீண்டும் எப்போ தெரியுமா?

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு! மீண்டும் எப்போ தெரியுமா?

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்குமான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 முதல் தேர்வுகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் ஜூன் 2ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்குமான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வுகள் வருகிற  ஜூன் மாதம் 15ம் தேதி தொடங்கும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com