தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சோதனையால் பரபர...முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சோதனையால் பரபர...முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு பல லட்ச ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

 
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் நெருப்பெரிச்சல் ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து கணக்கில் வராத  2 லட்சத்து 9 ஆயிரம்  ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
 
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர்பால் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். 

இதேப்போல், கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் சோதனை நடைபெற்றது. இதனையடுத்து 17 ஆயிரத்து 853 கைப்பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் தனியார் வணிக வளாகத்தில் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பணம் எதுவும் கைப்பற்றவில்லை என்றும், ஒரே ஒரு ஆவணத்தை மட்டும் கைப்பற்றியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com