அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்-  தமிழக அரசு அறிவிப்பு
Published on
Updated on
1 min read

தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.

இந்நிலையில் சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. awards.tn.gov.in  என்ற இணையதளத்தில் ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருதுடன் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்க பதக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபரை, தேர்வுக் குழு தேர்ந்தெடுக்க உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com