அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் நடக்கும் மோசடிகள்... விடுதிகள் இல்லாத இடத்தில் சமையலர் நியமனம்...

நெல்லையில் அரசு விடுதிகள் இல்லாத இடங்களில் சமையலரை நியமனம் செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் நடக்கும் மோசடிகள்... விடுதிகள் இல்லாத இடத்தில் சமையலர் நியமனம்...

நெல்லையில்  ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர்கள் விடுதிகளில் விடுதிகள் இல்லாத இடத்தில்  சமையலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஒடுக்கப்பட்ட பல்வேறு  அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து நெல்லையில் ஒடுக்கப்பட்ட சமூக கட்சிகள், இயக்கங்கள் கூட்டமைப்பு  தலைவர் முத்தராப்பன் நெல்லை பத்திரிகையாளர்  மன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

மாவட்டத்தில் வருவாய் துறையில் பட்டியல் இன ஊழியர்கள் பழி வாங்கப்படுவதை நிறுத்த வேண்டும்,  பட்டியல் இனத்தவர்களை தாசில்தார்களாக நியமிக்க வேண்டும். மாவட்டத்தில் நோடல் அலுவலரை நியமனம் செய்ய வேண்டும்.

பட்டியல் பழங்குடி ஊழியர்களுக்கு தனி அலுவலகம் ஒதுக்க வேண்டும், ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இல்லாத இடங்களில் சமையலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். 

பட்டியல் இன மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதி பல கோடி ரூபாய்  குளறுபடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.  இதில் மனித உரிமை களம் பரதன், சுந்தரலிங்கனார் இயக்கம் மாரியப்ப பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முத்து வளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com