உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை கைது செய்து விசாரிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசாரணைக்கு அழைத்து செல்லும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை பற்களை உடைத்து சித்ரவதை செய்வதாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இச்சமபவம் தொடர்பாக பல்வேறு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலவீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடுவதாக சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் உதவி கண்காணிப்பாளர் பலவீர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சருக்கு அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற போலீஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேணுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: கடைகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் விலைகுறைப்பா...?!!