சிக்கிய அரிக்கொம்பன்! மக்கள் நிம்மதி!

சிக்கிய அரிக்கொம்பன்! மக்கள் நிம்மதி!

தேனி அருகே மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப் பட்டது. இதனால், மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட கிராமங்களில் அரிக்கொம்பன் என்று பெயரிட்டு அழைக்கப்படும் காட்டு யானை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8 பேரை கொன்றதாகவும், ஏராளமான விளை பயிர்களை நாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த காட்டு யானை கடந்த மாதம் 29ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது.

ஆனால், இந்த யானை கடந்த சில நாட்களுக்கு முன் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து,  கவுண்டன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணையில் முகாமிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், சின்ன ஓவுலாபுரம்  அருகே உள்ள பெருமாள் கோவில் பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். 

மேலும், அரிக்கொம்பனை 3 கும்கி யானைகள் மூலம் வனப்பகுதிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரிக்கொம்பன் யானை பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இதையும் படிக்க:பிரிட்ஜை திறந்த பொழுது பரிதாபம் : மூதாட்டி தீக்காயம் - மகன்களுக்கு மூச்சுதிணறல்