கோவை அன்னூரை சேர்ந்த விவசாயி கோபால் சாமி மீது போடப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வலியிறுத்தியும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்திய ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் உதவியாளரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் கூட்டம் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்திலிருந்து பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்பாட்டதத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பதக் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்ஜூன் சம்பத், கோவை அன்னூரில் விவசாயிகளுக்கு எதிராக பி.சி.ஆர் சட்டம் தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது கோபால் சாமி விவகாரத்தில் உண்மை வெளி வந்துவிட்டது
முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் விவசாயி கோபால் சாமியை சந்தித்து இருக்க வேண்டும், 24 மணி நேரத்தில் கோபால் சாமி மீது வழக்கு போட்ட நீங்கள், உண்மை தெரிந்தவுடன் ஏன் அவர் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் பெறவில்லை என்றார். பி.சி.ஆர் சட்டம் அரசு ஊழியர்களுக்கு பொறுந்தாது என சட்டம் கொண்டு வர வேண்டும், சென்னையில் நீதி கிடைக்கும் என வந்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், விநாயகர் விழாவிற்கு ஒரு தலை பட்சமாக தடை விதித்துள்ளனர். விநாயகர் வைப்பதால் கொரோனா பரவும் என்பது ஏற்புடையது அல்ல எனவும் இந்து சமய தலைவர்களை ஒழுங்கு படுத்தி, விநாயகர் விழா கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்ற அவர், விநாயகர் விழா தடை என்பது வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயல் என்றார்.
மேலும் இது தொடர்பாக வரும் 6 ஆம் தேதி இந்து மக்கள் கட்சி மாநிலம் முழுவதும் ஆர்பாட்டோம் நடத்த போவதாகவும், 10 ஆம் தேதி தடையை மீறி விநாயகர் சிலையை பிரதிஷ்டி செய்வோம், நீதிமன்றத்தையும் நாடுவோம் என்றார்.
டாஸ்மார்க் கடையில் கூட்டம் கூடினால் கொரோனா வரவில்லையா? என்றவர் கோயில்களை திறப்பதால் கொரோனா ஓடிவிடும் கோயிலில் செய்யும் யாகங்கள், மந்திரங்கள் கொரோனாவை விரட்டி அடிக்கும் கோயில்களில் மருத்துவ முகாம்களை நடத்துங்கள் கோயில்கள் திறந்திருந்தால் நல்லது. டாஸ்மாக்கில் பரவாத கொரோனாவா என்றார்.
மேலும், கே.டி.ராகவன் விவகாரம் குறித்து பேசிய அவர் சதி வலையில் திட்டமிட்டு கே.டி.ராகவகவை சிக்க வைத்துள்ளனர். அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்தால் அவரை தூக்கில் போடலாம் என்ற அவர், இது போன்ற விவகாரம் குறித்து திருமாவளவனிடம், சீமானிடம் கேளுங்கள் எனவும் அப்போது தெரிவித்தார். திமுகவில் பாலியல் புகாரில் சிக்கினால் பதவி கிடைக்கும் பெரியகருப்பன் அமைச்சராகிவிட்டார். அதேபோல திருச்சி சிவா எம்.பி. ஆகிவிட்டார் எனவும் அப்போது கூறினார்.