வன்கொடுமை சட்டம் பதிவு
ஆர்.கே தொகுதி எம்.எல்.ஏ ஜே.ஜே.எபிநேசர் அந்தபகுதியில் உள்ள சாக்கடையே வெறும் கைகளால் சுத்தம் செய்ய சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி அதனை கண்டும் ரசித்திருக்கிறார் எம்.எல்.ஏ எபிநேசர்.
இவர்மீது (manual scavenging act) மனித ஆற்றலால் மனித கழிநிலை வெளியேற்றுதல் சட்டத்தின் படி வன்கொடுமை சட்டம் பதிய செய்யவேண்டும். 1993 ல் வந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். காவல் துறை இதனை பதிவு செய்யவேண்டும் இதனை வன்கொடுமை சட்டம் பதிவு செய்வார்களா இல்லை இதையும் போராட்டம் நடத்தி பதிவு செய்வார்களா தெரியாது?
திமுக சாதி கட்சி
இதற்கு தண்டனை ஒருவருசம் கடுங்காவல் தண்டனை. இதற்கு பெயில் கிடையாது .ஒருபக்கம் (manual scavenging) மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் இருக்ககூடாது என கருதும்போது, அதனை தாண்டியும் அந்த பாதிக்கப்பட்ட நபர் பட்டியிலன சமூகத்தை சார்ந்தவர். ஆகவே அந்த எம்.எல்.ஏ மீது வன்கொடுமைச்சட்டம் பதிய வேண்டும். இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் . தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் குறிப்பாக திமுகவை சார்ந்தவர்கள் எதை வேண்டுமானலும் செய்துவிடலாம் ஒரு சாமனிய மனிதனை பொது இடத்தில் அவமானப்படுத்தலாம், திட்டலாம் , மக்கள் முன்னாடி தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ள வெறும் கைகளால் சாக்கடை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார்.
உடனடியாக அந்த எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான சமூகநீதி நிலைநாட்டக்கூடியவர் என கருதலாம் .அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக என்பது வெறும் சாதி ஆதிக்கம் உள்ள கட்சிதான் என நாம் அறிந்துக்கொள்ளலாம் எனகூறினார் அண்ணாமலை .