வங்கி ஊழியர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து கொள்ளை முயற்சி...வசமாக சிக்கிய திருடன்!

வங்கி ஊழியர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து கொள்ளை முயற்சி...வசமாக சிக்கிய திருடன்!
Published on
Updated on
1 min read

தாடிக்கொம்பு அருகே வங்கியில் நுழைந்த கொள்ளையன் ஊழியர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இதில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருன்றனர். காலையில் வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, வங்கிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் பணம் எடுப்பது போல் வந்து, தான் மறைத்து வைத்திருந்த ஸ்பிரேவை ஊழியர்கள் முகத்தில் அடித்துள்ளார். இதில், ஊழியர்கள் மயக்கமடைந்தனர். பின்னர் அந்த இளைஞர் வங்கி மேலாளர் அறைக்குள் நுழைய முயன்றபோது, சுதாரித்துக் கொண்ட வங்கி மேலாளர் சாதுர்யமாக செயல்பட்டு, கொள்ளையனை மடக்கிப் பிடித்து, ஊழியர்கள் உதவியுடன் கட்டிப் போட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கொள்ளையனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், கொள்ளையன் திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலில் ரகுமான் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையனிடம் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடைய செய்தது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com