நேர்டு தொண்டு நிறுவனம் - வனத்துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாம்...!!

நேர்டு தொண்டு நிறுவனம் - வனத்துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாம்...!!

மனித விலங்குகள் மோதலை தடுக்க விழிப்புணர்வு முகாம்...!!!

வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள சாடி வயல் பகுதியில் நேற்று நேர்டு தொண்டு நிறுவனம் வனத்துறையுடன்  இணைந்து  மனித விலங்குகள் மோதல் தடுப்பு விழிப்புணர்வு முகாம், வேட்டை தடுப்பு காவலர்களுக்கான களவு உபகரணங்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள்  நடைப்பெற்றன. இதில் மாணவர்களுக்கு சைக்கிள்களும், 50 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு சீருடை மற்றும் அதிகதூரம் வெளிச்சம் கொடுக்கும் டார்ச் லைட்டுகளும், 50 பேருக்கு வேட்டி சட்டைகளும் சுமார் 300 பேருக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் நேர்டு தொண்டு நிறுவனத்தில் அமைந்துள்ள சர்வதேச எரிசக்தி வளர்ச்சி நிறுவன இயக்குனர் காமராஜ் பேசுகையில், வனத்தை பாதுகாப்பதில் யானைகள் பெரும் பங்கு வகிக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையால் கட்டிடங்கள், யானைகளின் வழித்தடத்தில் கட்டப்படுவதால் மனித விலங்கு மோதலுக்கு வழி வகுக்கிறது. பழங்குடியினர்கள் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட்டால் விலங்குகள் மோதலை தவிர்க்கலாம்.

இதற்கு உறுதுணையாக அதிக தூரம் வெளிச்சம் கொடுக்கும் டார்ச் லைட்டுகள் வேட்டை தடுப்பு காவலர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சார வசதி இன்றி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய அமைச்சகத்தின் மூலமாக 2030 ஆம் ஆண்டிற்குள், சுமார் 450 ஜிகா வாட்ஸ் (அதாவது 4,50,000 மெகா வாட்ஸ்) மின்சாரம் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மூலமாக உற்பத்திகளுக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது.  

இதை எட்டும் வகையில் நேர்டு தொண்டு நிறுவனம், மின்சார வசதி இல்லாத மலைவாழ் கிராமங்களில் கரிம எரிவாயு சூரிய சக்தி மற்றும் நீர் மின்சக்தி மூலமாக மின்சார வசதி செய்து கொடுத்து வருகிறது. இந்த புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி பயன்பாட்டால் பசுமை வாயுக்கள் வெளிப்பாடு குறைய வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் உலக வெப்பமயமாக்கல் தவிர்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

மேலும் நேர்டு தொண்டு நிறுவனம் சத்திய ஜோதி பேசுகையில், மகளிர் சுய உதவி குழுக்களில் மகளிர்களை ஊக்கப்படுத்த, குடும்ப தலைவர்களுக்கு வேஷ்டி, மகளிருக்கு சேலை வழங்கப்படுகிறது. நேர்டு தொண்டு நிறுவனத்தின் 40வது ஆண்டின் சமூக சேவை பணியில், மனித விலங்குகள் மோதலை தவிர்க்க விழிப்புணர்வு முகாம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள 28 மலை கிராமங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார். பேளுவாம்பட்டி வனச்சரகர் சுதந்திரநாத், மனித விலங்குகள் மோதல் அதிகாலை மற்றும் பின் இரவுகளில் வெளிச்சம் இல்லாததால் தான் ஆபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அதிக தூரம் வெளிச்சம் கொடுக்கும் டார்ச் லைட்டுகள் மிகவும் இன்றி அமையாது. இதனை வழங்குவதற்கு முன் வந்த நேர்டு தொண்டு நிறுவனத்தை மிகவும் பாராட்டுகிறேன் என கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com