கை கழுவுதல் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரியில் கை கழுவுதல் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  
கை கழுவுதல் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on
Updated on
1 min read

உலக கைகள் கழுவும் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணவு  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள்  பங்கேற்றனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கை கழுவுதல் அவசியம் பற்றியும் எவ்வாறு கைகழுவ வேண்டும் என்பதை செயல்முறையாக செய்து காண்பித்தனர். மேலும் ஏழை மக்களுக்கு கை கழுவுதல் அவசியத்தை உணர்த்துவதற்காக சோப்பு பெட்டியை முதல்வர் ஜெயந்தி தொடங்கி வைத்தார். இந்த சோப்புப் பெட்டியில் கிடைக்கும் சோப்புக்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்தார்.

மேலும் கை கழுவுவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடனங்களை நடத்திக் காண்பித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com